Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் தியாகம் செய்த நாடு”… குரல் கொடுத்த சீனா… இந்தியா,அமெரிக்கா கண்டனம்…!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான இணைய வழி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  பாகிஸ்தானில் தீவிரவாதம் மறைமுக யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கும், எல்லைத் தாண்டிய தீவிரவாத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மும்பைத்தாக்குதல், பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குறுக்கிட்டது. அப்போது பாகிஸ்தான் மிகப்பெரிய தியாகங்களை செய்திருப்பதாகவும் தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. இவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு  தீவிரவாத இயக்கங்கள் தனது மண்ணிலிருந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று இந்தியாவும் அமெரிக்காவும் தெள்ளத்தெளிவாக அந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |