தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை செய்ப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
மதுரை சிந்தாமணியை சேர்ந்த திமுக பிரமுகரான பாண்டி, அங்குள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் பாண்டியை நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இந்நிலையில் பல வெட்டு காயங்களுடன் அருகில் இருந்த வீட்டுக்குள் ஓடிய அவரை துரத்திச் சென்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர் .
இதில் சுயநினைவின்றி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றன.தேர்தல் சமயத்தில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.