நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பறக்க விடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி 75 ஆவது சுதந்திர தினத்தை பலவகையில் கொண்டாடிவரும் நிலையில் கேரளாவை சேர்ந்த மூன்று மாணவர்கள் பேனாவில் மூவர்ண கொடியை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
கேரளாவின் திருச்சூர் அருகே தேவமாதா பள்ளியில் பிளஸ் டூ மாணவர்கள் 1699 பேனாக்களால் 6 அடி நீளம் 3 அடி அகலம் கொண்ட கேன்வாஸில் காந்தியின் படத்தை வரைந்துள்ளனர். இரண்டு வாரம் முயற்சிக்குப் பிறகு இது தயாரிக்கப்பட்டுள்ளது. 1699 பேனாக்களுடன் மூவர்ண கொடியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உருவப்படத்தை உருவாக்கிய மாணவர்களுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. 75 ஆவது சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக இந்த தேசிய கொடியில் காந்தி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.