தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக தமிழகம் முழுவதுமாக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேங்காய் உடைக்கவும், அர்ச்சனை செய்யவும் அனுமதி இல்லை.
இந்நிலையில் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில், வரும் 17ம் தேதி முதல் 21 வரை திறக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.