கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
வாலிபர் கைது செய்யப்பட்டது எப்படி ?
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்த நல்லூர் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் கார்த்திகேயன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். பதின் பருவத்தில் இருந்த சிறுமியும் கார்த்திகேயன் விரித்த காதல் வலையில் விழுந்துள்ளார். மேலும் கார்த்திகேயன் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, தங்களது காதலை ஆழப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையுயில் இரு தங்களுக்கு முன்பு திடீரென்று சிறுமி காணாமல் போயுள்ளார். அதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுமி எங்கு தேடியும் தேடியும் கிடைக்காததால் காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தனது மகள் கார்த்திகேயன் என்பவருடன் பழகி வந்ததாகவும், அவர் தான் தங்களது மகளை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என சந்தேகப் படுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து செல்போன் சிக்னலை வைத்து கார்த்திகேயனை கண்டுபிடித்த காவல்துறையினர் அவனிடம் தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை செய்தபோது, கார்த்திகேயன் சிறுமியை அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதையடுத்து கார்த்திகேயனின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.