Categories
உலக செய்திகள்

17வயது பெண்ணை நாசம் செய்த… ”2பேரை தீயிட்டு கொளுத்திய மக்கள்”…. தெரிய வந்த உண்மை பின்னணி…!!

நபர் ஒருவர் இளம்பெண்ணை நாசம் செய்து அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டில் நரோக் மாவட்டத்தை சேர்ந்தவர் மெர்சி சிலாம் பாராயோ(17). மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர் திடீரென்று மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். அந்த சடலத்தின் மேல் ஐந்து முறை கத்தியால் குத்தப்பட்டு இருந்தது மட்டுமின்றி ஒரு கண் தோண்டப்படும், தலை சிதைந்த நிலையிலும் இருந்துள்ளது.

இதையடுத்து  சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மெர்சியை கொலை செய்த அந்த நபரை கிராம மக்கள் அடையாளம் கண்டு அவரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். மேலும் அவருக்கு உதவிய மற்றொரு நபரையும் பிடித்துள்ளனர். பின்னர் இருவரையும் ஒன்றாக சேர்த்து கட்டி வைத்து கடுமையாக தாக்கி அவர்களை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இளம்பெண் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அந்த நபர் ஏற்கனவே மெர்சியுடன் பழக்கத்தில் இருந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த நபரும், மெர்சியும் தனிமையில் சந்தித்து கொள்ள முடிவு செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கிராம மக்கள் அடித்து கொலை செய்த அந்த நபர் தான் மெர்சியை கொலை செய்துள்ளார் என்பது தற்போது உறுதி செய்ய முடியாது என்பதால் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |