வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி, அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரட்சி மாவட்டமாக கருதப்படும் சிவகங்கை மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றும் வகையில் நபார்டு திட்டத்தின் மூலம் 17 கோடி ரூபாய் செலவில் மானாமதுரை-சிவகங்கை இணைப்பு சாலை பாலத்திற்கு மேல்புறத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
இந்த ஆணையால் 545.57 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் அணையில் இருந்து மேலப்பசலை கண்மாய் வழியாக “நாட்டார்கால்வாய்” திட்டத்தின் மூலம் பயன்பெறும் 16 கண்மாய்கள், ராமநாத மாவட்டத்தில் உள்ள 4 கண்மாய்களும் பயன்பெறும் என கூறியுள்ளார். மேலும் இந்த பணி 18 மாதத்திற்குள் முடித்து அணை பயன்பாட்டிற்கு வரும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.