Categories
மாநில செய்திகள்

“17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி” அரசி எலிசபத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்….!!!!

இங்கிலாந்து அரசு எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் 70 ஆண்டுகள் அரசாங்க ஒரே மகாராணி. 17 பிரதமர்கள் கண்ட ஒரே மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவ பணி செய்த முதல் அரண்மனை பெண். அரசியலில் தானே உலகை உணர வைத்த முதல் மகாராணி. உங்களோடு கைக்குழுக்கியது என் உள்ளங்கை பெருமை. உங்கள் புகழை காலம் சுமந்து செல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |