ஸ்ரீநகர் பகுதி அருகே உள்ள ஏடிஎம் வங்கி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் 17 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள எஸ்பிஐ வங்கி சொந்தமான ஏடிஎம்மில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதல்கட்டமாக 17 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்துள்ளது.
முழு விசாரணைக்கு பிறகு எவ்வளவு பணம் திருடு போனது என்பது குறித்து முழு தகவல் தெரிய வரும். ஏடிஎம் காவலரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.