தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை கெமர்ரூச் கொடுங்கோலர்கள் போல் பாட், இயங்சரே நுவான்சியா கியூ சம்பான் போன்றோர் கடந்த 1975 முதல் 79 ஆம் வருடம் வரை ஆட்சி செய்துள்ளனர். அப்போது 17 லட்சம் அப்பாவி பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐநாவின் முயற்சியால் இவர்கள் நான்கு பேர் மீதும் கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் ஓர் குற்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் போல் பாட்(87) 1998ல் உயிரிழந்துள்ளார்.இயங்சரே(87) 2013 ஆம் வருடம் உடல்நல குறைவால் உயிர் இழந்துள்ளார். இந்த நிலையில் வெளியுறவு அமைச்சராக இருந்த நுவான்சியா(93) 2019 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார். இவர்களில் உயிருடன் இருக்கும்கியூ சம்பான்(91) என்பவருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் கொடுங்கோள் தலைவர்களில் போல் பாட் தவிர மீதமுள்ள மூன்று பேரின் வழக்கை விசாரித்து தண்டனை வழங்க பதினாறு வருடங்களில் ரூபாய் 2,720 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.