Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

17 வயதில் திருமணம் செய்து… 2 குழந்தைகள் பெற்ற இளம் பெண்…. கணவனின் முடிவால் முடிவுக்கு வந்த வாழ்க்கை..

திருமணம் முடிந்த இளம் பெண் கணவனின் செயலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி இவரை 17 வயதில் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இத்தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான ஜெகநாதன் தினமும் குடித்துவிட்டு ஹேமாவதியிடம் சண்டையிட்டு உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹேமாவதி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் ஜெகநாதன் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஹேமாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே ஹேமாவதியின்  தந்தை கண்ணன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் இறந்த மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் ஜெகநாதனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார். அதோடு அதற்கு தனது மகள் இடையூறாக இருப்பாள் என்று நினைத்து அடித்து கொலை செய்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதாக கூறியுள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |