உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பு பகுதியில்திலீப், கவுசல் மற்றும் அவனிஷ் என்று மூன்று இளைஞர்கள் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் அந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த அந்த இளைஞர்கள் இரண்டாவது மாடியிலிருந்து அந்த சிறுமியை தூக்கி எறிந்தது, மட்டுமில்லாமல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால் சிறுமியின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர்.