Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. போனில் வீடியோ எடுத்து மிரட்டல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி கோதாரா பகுதியை சேர்ந்த சாகில் 17 வயது சிறுமியை தொலைபேசியில் அழைத்து அவரது ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வரவழைத்துள்ளார். அதன் பிறகு சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த அர் பாஸ், ஜாவித், முஸ்தாக்கீம், தலிம் மற்றும் சல்மான் உள்ளிட்ட எட்டு பேர் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி அவரின் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடாமல் இருக்க ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கேட்டு வாங்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் எட்டு பேர் மீதும் கடந்த 29ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அக்ரம் நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |