Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி மாட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்பு…. தந்தை செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஹர்கலா என்ற கிராமத்தில் 17 வயது சிறுமி மாட்டு கொட்டகையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தை தேஷ்ராஜ், சகோதரர் தனஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சிறுமி காதலை கைவிட மறுத்துள்ளார்.இதனால் அந்த சிறுமியை, தந்தையும் சகோதரரும் சேர்ந்து  கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்த கொலைக்குப் பிறகு, அவ்வீட்டின் அருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் நிதின் குமார் தெரிவித்தார். மேலும் சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசாரை அணுகி, பின் வெள்ளிக்கிழமை சடலம் மீட்கப்பட்டு,  பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அறிக்கை கிடைத்தது. இதன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது, உறுதியானது. மேலும் சிறுமியின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் நிதின் குமார் தெரிவித்தார்.

Categories

Tech |