Categories
தேசிய செய்திகள்

17 வயது மகளின் தலையை வெட்டி… தெருவில் தூக்கி சென்ற தந்தை… பின்னர் கூறிய காரணம்?… அதிர்ச்சி…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது மகளின் தலையை தந்தை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சதீஷ் குமார் என்பவர், தனது மகள் வேறு ஒரு நபருடன் பழகியதால் ஆத்திரமடைந்து மகளின் தலையை தனியாக வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு அந்த தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை வழிமறித்து கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், மிகக் கூர்மையான ஆயுதம் ஒன்றால் மகளின் கழுத்தை அறுத்த தாகவும், அதன் பிறகு தலையை தனியாக எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கி வந்ததாகவும் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன்பிறகு போலீசார் அவரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு தலை இல்லாமல் அந்த பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது மகளின் தலையை கைப்பற்றும் போது முறையாக செயற்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |