Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

17 வயது மாணவியை… கடத்தி சென்று கல்யாணம் செய்த கல்லூரி மாணவர்… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கோகுல்ராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர்  கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவருக்கு 22 வயதான கோகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். கோகுல்ராஜ் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இதையடுத்து  கடந்த 2ஆம் தேதி அந்த மாணவியை கடத்திச்சென்று சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சண்டிகாருக்கு கூட்டி சென்றுள்ளார்.

இதுதொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  இதனடிப்படையில் ஜெயங்கொண்டம்  அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி சண்டிகரில் இருந்த கோகுல்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதால் அவர்கள் கடந்த 8 ஆம் தேதி சொந்த ஊரான சிலம்பூருக்கு வந்துள்ளனர். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து கோகுல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |