Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

:”17 வீடுகள்” தொடரப்பட்ட வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து பொதுமக்கள் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏரிக் கரையில் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி விழுப்புரம் கோட்டாட்சியர் பெருமாள் தலைமையில் ஒரு குழு பலத்த பாதுகாப்புடன் இளங்காடு கிராமத்துக்கு சென்றது.

அதன்பின் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 17 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு கோவிலை மட்டும் இடிக்காமல் வீடுகளை எடுத்துள்ளனர். அந்தக் கோவில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்குச் சொந்தமான கோவில் ஆகும். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தக் கோவிலையும் சேர்த்து எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானம் செய்தனர். அதன்பிறகு கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலை மட்டும் வெளியே எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  கோவில் இடிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தபகுதி மக்கள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |