லிப்ரா புரொடக்ஷன் சார்பாக நடத்த உள்ள குறும்படப் போட்டியில் 10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறை தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு விட்டது. இன்று டாப் ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் இளம் இயக்குனர்களால், அதுவும் அவர்களது முதல் படத்திலேயே கொடுக்கப்படுகிறது. இப்படியான இயக்குனர்கள் ஷார்ட் பிலிம் மூலமாக தான் முதன்முதலாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
சினிமாவில் சிறந்த வெற்றி இயக்குனராக நீங்கள் மாற ஆசைப்பட்டால், இதுதான் உங்களுக்கான நேரம். லிப்ரா புரொடக்ஷன்ஸ் நடத்தும் குறும்பட போட்டி, டிசம்பர் 15 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் http ://libraproductions .in/lsfa2021 என்ற இணையதளத்தில் உங்களது குறும்படங்களை அனுப்பலாம்.
முதல் பரிசு ரூபாய் 10 லட்சம், இரண்டாவது பரிசு ரூபாய் 5 லட்சம், மூன்றாவது பரிசு ரூபாய் 3 லட்சம். மேலும் குறும்படம் 17 முதல் 20 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சப் டைட்டில் முக்கியமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.