கொலம்பியாவின் ரொசஸ் நகரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொம்பியாவின் ரொசஸ் நகரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 17 பேர் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பலரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழதோருக்கு அந்நாட்டு அதிபர் இவான் டூகியூ ஆழ்ந்த இரங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்தார்.