Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 17 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 286ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 286ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 528 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.75% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 15,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 44 அரசு மற்றும் 33 தனியார் மையங்கள் என மொத்தம் 77 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்குட்பட்ட 1,765 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 27,906 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,558 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |