Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் ரூ.15 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டன. சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் காணொலி மூலம் இந்த கையெழுத்திடும் பணியானது நடைபெற்றுள்ளது.

ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் போன்ற நாடுகளின் இருந்து ரூ. 15,128 கோடி முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய தொழில் திட்டங்களை தமிழகத்தில் தொடங்க உள்ளனர்.

ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.15,128 கோடி முதலீடு செய்வதால் சுமார் 47,500 பேருக்கு நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டு முதலீடுகளை கவர தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |