சீன வனவிலங்கு பூங்காவில் உள்ள 17 வயதான கோலா கரடி சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது .
தெற்கு சீனாவில் உள்ள குவாங்சோ நகர பூங்காவில் 60 கோலா கரடிகள் உள்ளன.அதிலும் , உகி என்ற 17 வயது கோலா கரடி, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது .பொதுவாக கோலா கரடிகள் 10 -12 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும் தன்மையுடையது .
மேலும் உகி கரடி , 6 தலைமுறைகளை சேர்ந்த கரடிகளுடன் வாழ்ந்து வருகிறது.அதனால் இதனை பூங்கா காப்பாளர்கள் மிகக் கவனத்துடன் பராமரித்து வருகின்றனர். இதன் பற்கள் , 10 வயது கரடியின் பற்களை போல வலிமையாக உள்ளது எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் .