Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

170 ரன்கள்….. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் “பட்லர் – ஹேல்ஸ்” புதிய சாதனை..!!

டி20 உலக கோப்பை வரலாற்றில் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளது..

ஐசிசி டி20 உலக கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் (4 பவுண்டரி, 7 சிக்ஸர்) 86 ரன்களும் அதிரடியாக விளாசி வெற்றி பெற வைத்தனர்.

இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் 170 ரன்கள் குவித்து டி20 உலக கோப்பை வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. முன்னதாக தென்னாபிரிக்க அணியின் குயிண்டன் டிகாக் – ரூசோவ் ஜோடி 168 ரன்கள் எடுத்து சாதனை படைந்திருந்தது. அதுவே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி அதனை முறியடித்துள்ளது.

முதல் 5 டி20 உலகக் கோப்பை பார்ட்னர்ஷிப்கள் : 

ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து v இந்தியா, 2022 – 170*

குயின்டன் டி காக் மற்றும் ரிலீ ரோசோவ், தென்னாப்பிரிக்கா v பங்களாதேஷ், 2022 – 168

மஹேல ஜெயவர்த்தனா மற்றும் குமார் சங்கக்கார, இலங்கை v மேற்கிந்திய தீவுகள், 2010 – 166

முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம், பாகிஸ்தான் v இந்தியா, 2021 – 152*

அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இயோன் மோர்கன், இங்கிலாந்து எதிராக இலங்கை, 2014 – 152

Categories

Tech |