Categories
உலக செய்திகள்

“1700 பேரை கடத்திய நபர்”… இதனால தான் நான் கடத்துனேன்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா….?

1700 பேரை கனடாவிற்கு கடத்திய நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

மோகன், ரிச்சி என்ற பெயரால் அழைக்கப்படும் ஸ்ரீ கஜமுக செல்லையா என்ற நபர் கனடாவை சேர்ந்தவர். இவர் சுமார் 1700 பேரை இதுவரை கடத்தியுள்ளார். படகு மூலம் 154 புலம்பெயர்ந்தோருடன் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்ற செல்லையாவை Turks and Caicos அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ஒரு வருடம்  Turks and Caicos -வில் சிறை தண்டனை அனுபவித்ததார் செல்லையா. அதற்கு பின்பு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். முதலில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் பொய் என்று மறுத்து வந்தார் செல்லையா.

இந்நிலையில் நேற்று என்னுடைய  சுயலாபத்திற்காக வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு கடத்தியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.  திட்டமிட்டு கடத்தப்பட்டவர்களை (புலம்பெயர்ந்தவர்கள் ) இலங்கையிலிருந்து துபாய் , துபாயிலிருந்து மாஸ்கோ, அங்கிருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, அங்கிருந்து Turks and Caicos, அங்கிருந்து பஹாமாஸ் மற்றும் மியாமி என நீண்ட பயணத்தின் மூலம் யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்றுள்ளார் . இறுதியாக கடத்தியவர்களை கனடாவில் கொண்டு சேர்ப்பதுதான் செல்லையாவின் முக்கிய திட்டம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |