இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனங்களில் விப்ரோ நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனத்தில் தற்போது ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு 12000 நபரை மட்டும் வேலையில் தேர்ந்தெடுக்கும் நிலையில் தற்போது 17,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் பொறியியல் வளாக நேர்காணல் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மொத்தம் 23,653 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டு 2357 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக மற்ற வேலையாட்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டிருக்கின்றனர். விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றும் நபர்கள் இதுவரை 2.22 லட்சம் பணியாளர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக செளரப் கோவில் தெரிவித்துள்ளார்.
விப்ரோ நிறுவனம் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பது போலவே மற்ற அனைத்து நிறுவனங்களும் ஆட்களை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதில் டிசிஎஸ் என்ற நிறுவனம் இந்த ஆண்டு 75,000 நபரை வேலைக்கு சேர்ப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 40 ஆயிரம் நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.