12ஆம் வகுப்பு பொது தேர்வு போல நாம் நீட் தேர்வை பார்க்க வேண்டும் என மாநில துணை தலைவரான அண்ணாமலை அறிவுரை கூறியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து பல்வேறு குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிற்கு எதிராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதாவது, நீட் தேர்வை இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை பெறுவதற்கு கிடைக்ககூடிய வாய்ப்பாக பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வருஷா வருஷம் 12ம் வகுப்பில் தோல்வியடைந்துவிட்டோமே என்று சில மனவலிமை குறைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதனால் 12ம் வகுப்பு தேர்வை நம்மால் ரத்து செய்ய முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வை போலத்தான் நாம் நீட் நுழைவுத்தேர்வையும் பார்க்க வேண்டும் என்றும் அண்ணாமலை தனது பதிவில் சூர்யாவுக்கு பதில் கொடுத்துள்ளார்.