Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா சாதனை” – அமைச்சர்

கொரோனா பரவலை எதிர்த்து இந்தியா சாதித்து காட்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனைை படைத்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலுக்குப் பிறகு முதன்முறையாக மக்களவையில் அது பற்றிய உரையை நிகழ்த்திய ஹர்ஷ வர்தன், 10 லட்சம் பேரில் 3,328 பேருக்கு தொற்று என உலகிலேயே மிகவும் குறைந்த அளவு  விகிதங்களில் ஒன்றை இந்தியா கொடுத்து சாதித்து காட்டியுள்ளதாக கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், ஆந்திரா போன்ற 13 மாநிலங்களில் அதிக தொற்றும், இறப்பு எண்ணிக்கையும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

 

 

Categories

Tech |