Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கணவன் கண் முன்னே மனைவி பலி” அவினாசி அருகே சோகம்…!!

ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பிய தம்பதியினர் விபத்தில் சிக்கினார். 

திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள் இவர்கள் இத்தம்பதியினர் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த தாம்பதியினர் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு  ஓட்டுப் போட சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்த போது பின்னால் வந்த லாரி, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது கடுமையாக மோதியது. கமலம்மாள் இதில் மோட்டார்  சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய நிலையில்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உடனே  அக்கம்  பக்கத்தினர் மீட்டு சி சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இந்த விபத்தில் அவரது கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில்  அவர்  கண் முன்னே தன் மனைவியின் இறந்த சம்பவத்தை பார்த்து  கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.இதனால் அப்பகுதியே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியததையடுத்து அவர் மீது அப்பகுதி போலீசார் வழங்கு பதிவு செய்து  தேடி வருகின்றனர்.

Categories

Tech |