உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் வியூஷன் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் வைர சுரங்கங்களில் உள்ள ஒன்றான கோட்ஸ் சுரங்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1758 கேரட் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. டென்னிஸ் பந்து வடிவிலான இந்த வைரத்தின் விலை இந்திய மதிப்பில் 350 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடம்பர கை பைகளுக்கு பெயர்போன நிறுவனமான லூயிஸ் வியூஷன் இந்த வைரத்தை வாங்க உள்ளதாக அதன் தலைமை அதிபர் மைக்கேல் பர்க் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தங்கள் போட்டி நிறுவனமான ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.