Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 15,00,000 வரை விற்பனையான காங்கேயம் இன காளைகள்…!!

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சம் வரை மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

நத்தக்காடையூரில்  உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன கன்றுகள் ,காளைகள், மாடுகள் வாரம்  தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்ப்பட்டு வருகிறது  . இந்த சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களை சேர்ந்த காளைகள் வளர்ப்போர்,காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், மயிலை பூச்சிகாளைகள், காராம்பசு ஆகிய காங்கேயம் இனங்களை மட்டும் விற்பனை செய்துவருகின்றன.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் புகழ் பெற்ற கண்ணபுரம் மாட்டுச்சந்தையில்  காங்கேயம் இன நாட்டு பசுமாடுகள், கன்றுகள், காளைகள் வரத்து குறைந்ததுள்ளது. இந்த நிலையில் கண்ணபுரம் மாட்டுச்சந்தை முடிவடைந்ததை அடுத்து  இந்த சந்தைக்கு வழக்கம்போல் காங்கேயம் இன நாட்டு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.இதில் ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன்படி ஒரே நாளில் 36 நாட்டு மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரே நாளில் இந்த சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை செயப்பட்டது  . இதில் கரூர்,ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |