தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பணி: புதுக்கோட்டை மாவட்ட TNCSC கழகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர்
பணியிடங்கள்: 178
கல்வி தகுதி: பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவுபவர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காவலர் பணிக்கு அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 622002