சென்னை காவல்துறையில் ஆய்வாளர்களாக பணிபுரியும் 179 பேரை பணியிடை மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரையும் மேல் அதிகாரிகள் உடனடியாக புதிய இடங்களில் பணியாற்ற விரைவில் அனுப்ப வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அடையாறு, வேளச்சேரி, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி அடையாறு காவல் ஆய்வாளராக இருந்த ஆதவன் பாலாஜி தற்போது ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஜி டில்லி பாபு அம்பத்தூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு எஃப்-4 காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளர் எம் ஶ்ரீனிவாசன் மயிலாப்பூர் இ-1 காவல்நிலையத்தின் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். சூளைமேடு எஃப்-5 காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த என்.இளங்கோவன் அண்ணா சாலை டி-2 காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பூந்தமல்லி டிஐடபிள்யூ காவல் ஆய்வாளராக இருந்த கௌசல்யா காசிமேடு டிஐடபிள்யூ காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் இ-1 காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் அடையாறு ஜே-2 காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கமலகண்ணன் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் எஸ்-11 காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் கண்ணி நகர் ஜே-11 காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடபழனி ஆர்-8 ஆய்வாளர் புருஷோத்தமன் பேசின் பிரிட்ஜ் பி-4 காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.