ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
தமிழகத்தினுடைய 17 வது வனவிலங்கு சரணாலயமாக ”காவிரி தெற்கு காட்டூர்” வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த சரணாலயம் ஆனது அமைய இருக்கின்றது. ஏற்கனவே இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக தெற்கு சரணாலயம் அமைய உள்ளது. 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று அறிவித்து அரசாணை வெளியீடு. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் சரகங்களை உள்ளடக்கி சரணாலயம் அமைகிறது.