பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தேர் சேதமடைந்துள்ளதால் கடந்த 18 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் திருவிழா குழுவினர்கள் இணைந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அடி உயரமுள்ள மரத்தேரை உருவாக்கினர். இதனையடுத்து கடந்த வாரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம். எஸ். தரணிவேந்தன், நகர் மன்ற தலைவர் ஏ.சி. மணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக் குமார், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமியை தரிசனம் செய்துள்ளனர்.