நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி. இந்த திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்த நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி , அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ் ஆகிய இருவரும் சென்னை கடற்கரையில் சந்தித்துக் கொண்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் அந்த கதாபாத்திரத்தை பாராட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஜானகி சபேஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.