விமானத்தில் 18 ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த சமயம் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் வித்தியாசமாக பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண் கருவுற்று இருந்த நிலையில் சிகிச்சைக்காக விமானத்தில் மருத்துவமனை புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த சமயம் அந்தப் பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது மிகவும் வித்தியாசமான அனுபவம் என்பதால் குழந்தையின் பெற்றோர் பெயரையும் வித்தியாசமாக வைத்தனர்.
பல்லாயிரம் அடி உயரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஸ்கை என பெயரிட்டனர். அதன் பிறகு தாயும் சேயும் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் அதற்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் தாய் பிறப்பு சான்றிதழை நிரப்புவது மிகவும் கடினம் என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார் காரணம் குழந்தை பூமியிலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் பிறந்ததே.