சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் இருக்கும் மேல்வாலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் மயானகொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது அம்மனுக்கு கத்தி, ஈட்டி, சூலாயுதம் போன்ற ஆயுதங்களை ஏந்தியவாறு 18 கரங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதன்பிறகு ஆவேச அலங்காரத்தில் காட்சியளித்த அங்காளம்மனை மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த திருவிழாவின்போது பக்தர்கள் சிலர் அம்மன் வேடங்கள் அணிந்திருந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சிறப்பு தரிசனம் செய்தனர்.