மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சாதாரண உடை அணிந்து காலை 7 மணி அளவில் அலுவலகத்திலிருந்து கிளம்பியுள்ளார். இதனை அடுத்து சீனிவாசன் 18 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வடமதுரையில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் இருக்கும் முக்கிய கோப்புகள், வருகைப்பதிவேடு போன்ற ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் நடத்தப்பட்டிருக்கும் வாகனங்களை முறையாக நிறுத்தும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தி விட்டு போலீஸ் சூப்பிரண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.