Categories
Uncategorized உலக செய்திகள்

18 குழந்தைகளுக்கு கத்தி குத்து….. மழலையர் பள்ளியில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்…. இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்….!!

சீனாவில் மழலையர் பள்ளியில் நுழைந்து 18 குழந்தைகளை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சீனா குவாங்சி ஜூவாங்க் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் உள்ள குழந்தைகளை ஒரு நபர் கத்தியால் குத்தியுள்ளார். அதில் 18 குழந்தைகளுக்கு கத்தி காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்த கொடூர தாக்குதலை நடத்திய நபர் நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுக்குறித்து காவல்துறையினர் கூறுகையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்றும் சீனாவில் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த ஆண்டு ஏழு பேரை கத்தியால் குத்தி ஒரு மாணவனை கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |