Categories
உலக செய்திகள்

18 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்…. ஆராய்ச்சியாளர்களின் அற்புதமான கண்டுபிடிப்பு….!!!!

பிரிட்டனில் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 18 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கடல் வாழ் உயிரினத்தின் எச்சத்தை கண்டுபிடித்துள்ளனர். “Ichthyosaurus” என்றழைக்கப்படும் இந்த உயிரினம் மத்திய இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினத்தை “கடல் டிராகன்” என்று அழைக்கின்றனர்.

அதேபோல் இந்த உயிரினம் சுமார் 33 அடி நீளம் உடையதாகவும், அதனுடைய மண்டையோடு மட்டும் 6 1/2 அடி நீளம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் Triassic காலத்தை சேர்ந்த இந்த உயிரினம் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த உயிரினத்தின் மிக பழமையான எச்சம் பிரிட்டன் மண்ணில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |