Categories
தேசிய செய்திகள்

18% ஜி.எஸ்.டி வரி உயர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா….? இதோ லிஸ்ட்….!!!!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நேற்று சண்டிகரில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்தி ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி

எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு

சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் அதிகரிப்பு

கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்வு

சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

Categories

Tech |