டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் போக முடியும் என்றால் யாராலும் நம்ப முடியுமா? ஆம் டெல்லியில் இருந்து லண்டன் செல்வதற்காக ஸ்பெஷலாக ஒரு பேருந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த பஸ்ஸில் செல்லும் பணத்தை வைத்து ஒரு வீடு கட்டிவிடலாம். ஏனென்றால் அந்த பேருந்தில் பயணிப்பதற்கான பணம் கிட்டத்தட்ட 15 லட்சம். இந்த பேருந்தில் டெல்லியிலிருந்து லண்டன் செல்வதற்கு கிட்டத்தட்ட 18 நாடுகளை தாண்டி தான் செல்ல வேண்டும்.
லண்டனுக்கு விமானத்தில் சென்றாலே பல நாட்கள். எனவே இந்த பேருந்தில் டெல்லியிலிருந்து லண்டன் செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்தால் 70 நாட்கள் ஆகும். இந்த பேருந்தில் மொத்தமாக 20 சீட்டுகள் மட்டுமே இருக்கும். அதுமட்டுமில்லாமல் பேருந்திலேயே தேவையான உணவுகள் பரிமாறப்படுகிறது.