Categories
மாநில செய்திகள்

“18 நாட்களில் 8 மாநிலங்களுக்கு பயணம்”… ராமாயண பக்தி சுற்றுலா ரயில் துவக்கம்…. !!!!!!!!!

கல்வி, சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் வழங்கும் ஸ்ரீ ராமாயணம் யாத்திரையில் சர்வதேச யோகா தினமான 21 ம் தேதி இந்தியா, நேபாளம் இடையே  முதன்முறையாக ராமாயண பக்தி  சுற்றுலா பயணத்தை தொடங்க உள்ளது. ஐ ஆர் டி சி யின் ஸ்ரீ ராமாயணம் யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களுக்கு செல்வதற்காக ஸ்ரீ ராமாயணம் யாத்திரையை ஐஆர்சிடிசி தொடங்கியிருக்கின்றது.

மேலும் இந்த ரயில் இந்தியா நேபாளம் வழியே 18 நாட்களுக்கு 8 மாநிலங்களில் 8,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கின்றது. இந்த பக்தி சுற்றுலாவில் முதன்முறையாக நேபாளத்தில் ஜனக்பூரில் அமைந்துள்ள அன்னை சீதாபிராட்டி கோவிலுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.  டெல்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில் முதலில் ராமர் பிறந்த அயோத்திக்கு செல்லும் அங்கு ராம ஜென்மபூமி கோவில் ஹனுமன் கோவிலுக்கு பக்தர்களை அழைத்து செல்லும். மேலும் நந்திகிராமில் உள்ள பரதன் கோவிலுக்கும் பயணிகள் தரிசனத்திற்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் . ரயில் பயணத்தில் பல்வேறு விதமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த ராமாயணம் பக்தி சுற்றுலாவிற்கு நபர் ஒருவருக்கு கட்டணம் 60 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உணவு, தங்குமிடம், சுற்றுலா வழிகாட்டி காப்பீடு போன்ற அனைத்து செலவுகளும் அடங்கும். 600 நபர்கள் பயணிக்கக்கூடிய இந்த ரயிலில் இதுவரை 450 பேர் ராமாயண பக்தி சுற்றுலாவிற்கு பதிவு செய்து இருக்கின்றனர். மேலும் இந்த ரயிலில் 18 நாட்களில் எட்டு மாநிலங்களுக்கு பயணம். இதில் ராமாயணத்தில் தொடர்புடைய  இடங்களை தரிசனம் செய்து கொள்ளலாம். இந்த ரயில் இந்தியா நேபாளம் வழியே 18 நாட்களுக்கு 8 மாநிலங்களில் 8000 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கின்றது. இந்த பக்தி  சுற்றுலாவில் முதன்முறையாக நேபாளத்தில் ஜனக்பூரில் அமைந்துள்ள சீதாபிராட்டி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |