குஜராத் மாநிலத்தில் பொடாட் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் இந்திரஜித் கச்சர் என்பவரிடம் நெருங்கி பழகி இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த இளம்பெண் இந்திரஜித் பண்ணைக்கு கடந்த 9ஆம் தேதியன்று சென்றுள்ளார். அப்போது அந்தப் பண்ணையில் இந்திரஜித்தின் நண்பரான சத்யஜித் கட்டார் மற்றும் ஜெய்வீர் கட்டார் ஆகியோர் இருந்தனர். இவர்கள் மூவரும் குடித்துவிட்டு அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கும்பல் அந்த இளம்பெண்ணை 18 நாட்கள் பண்ணையில் மறைத்து வைத்து டிசம்பர் 26ஆம் தேதியன்று இளம்பெண்ணை வெள்ளை விடுவதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் விடுவித்த உடன் வீடு திரும்பக் கூடாது என்றும் ராஜ்கோட்டிற்க்கு தான் செல்ல வேண்டும் என்று அவர் வற்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால் இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து விடுவிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை அவரது உறவினர் ஒருவர் ஜாம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஜாம்நகர் பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். உடனே போலீசார் இந்திரஜித் கச்சர், சத்யஜித் கட்டார் மற்றும் ஜெய்வீர் கட்டார் ஆகிய மூவரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.