அலோன் படத்தின் படப்பிடிப்பை வெறும் 18 நாட்களில் எடுத்து முடித்துள்ளனர்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் தமிழில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன், ப்ரோ டாடி போன்ற படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இதுதவிர ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் அலோன் படம் உருவாகி வருகிறது. ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார் .
மேலும் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் வெறும் 18 நாளில் அலோன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் 18 நாளில் எப்படி எடுத்து முடித்தனர் என திரையுலகினர் ஆச்சரியத்தில் உள்ளனர். சரியாக திட்டமிட்டு படமாக்கியதால் மட்டுமே இது சாத்தியமானது என இயக்குனர் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார்.