ஜம்மு-காஷ்மீரில் சுமார் 18 மாதங்களுக்கு பின்பு அதிவேக இணைய சேவை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஏறக்குறைய சுமார் 18 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் 4G இணைய சேவை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவரப்போவதாக செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவிலிருந்து இச்சேவை நடைமுறைக்கு வரலாம் என பிடிஐ செய்தி முகாம் அறிவித்துள்ளது.
4G Mubarak! For the first time since Aug 2019 all of J&K will have 4G mobile data. Better late than never.
— Omar Abdullah (@OmarAbdullah) February 5, 2021
அதாவது கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தடை செய்யப்பட்டது. அப்போதிலிருந்து இந்திய அரசு ஜம்மு-காஷ்மீரில் மொபைல் இணைய சேவை போன்ற தகவல் தொடர்பு சேவைகள் அனைத்தையும் நிறுத்தியது. அதன்பின்பு கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கண்டெர்பால் மற்றும் உதம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் இணையவசதி அதிவேகமாக வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 2019 வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அவை பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இதனை எதிர்த்த அரசியல் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் போன்ற நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.