Categories
தேசிய செய்திகள்

18 மாத நிலுவைத்தொகையும் மொத்தமா வருது?…. உறுதியளித்த மாநில அரசு…. குஷியில் அரசு ஊழியர்கள்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்த அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனிடையில் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கொரோனா 2-ம் அலையின் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகளுக்கு பின் விலைவாசிகளும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி தொகையை வழங்கவும், அகவிலைப்படியை உயர்த்தவும் கோரிக்கைகள் எழுந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையில் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். 2022ஆம் வருடம் தொடங்கி உள்ளதை அடுத்து 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை எப்போது கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகையை ஒரே தவணையில் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை சுமார் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி நிலுவை தொகையை செலுத்துவது தொடர்பாக கேபினட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளனர். ஆகவே கேபினட் ஒப்புதல் கிடைத்த பின் அகவிலைப்படி நிலுவைத்தொகை அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |