தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் பரவல் வேகம் அதிகரித்து வருவதால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கல் போன்றவற்றில் பல கட்டுப்பாடுகள் என பல்வேறு விதிமுறைகள் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம்146 தெருக்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 70 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 18 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.