Categories
தேசிய செய்திகள்

18 முதல் 44 வயதுடையோருக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 18 முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போட இணையத்தில் பதிவு செய்யும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இணையத்தளத்தில் பதிவு செய்யும் முறையுடன் தற்போது நேரடியாக பதிவு செய்யும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களுக்கு மக்கள் சென்று வர உரிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |