தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள்(18.03.2022) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. முன்னதாக நெல்லை மாவட்டத்திற்கு 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories